திண்டுக்கல்: மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பார் சூப்பர் கில்லீஸ் அணியின் நட்சத்திர வீரர் விஜய் ஷங்கர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

Advertisement

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 25ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ராம் அரவிந்த் ரன்கள் ஏதுமின்றியும், பாலச்சந்தர் அனிருத் 4 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சதுர்வேத் மற்றும் ஆதீக் உர் ரஹ்மான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சதுர்வேத் 31 ரன்களை எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து சரத் குமார் ஒரு ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆதீக் உர் ரஹ்மான் 41 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தானர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் முருகன் அஸ்வின் 38 ரன்களையும், சரவணன் 20 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் மதுரை பாந்த்ர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. சூப்பர் கில்லீஸ் தரப்பில் விஜய் ஷங்கர் 3 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து சூப்பர் கில்லீஸ் அணி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியில் தாமதம் ஏற்பட்டது. 

அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சூப்பர் கில்லீஸ் அணிக்கு 14 ஓவர்களில் 114 ரன்க்ள் என்ற இலக்கானது நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆஷிக் மற்றும் மோஹித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹரிஹரன் 17 ரன்களிலும், ஆஷிக் 22 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபா அபாரஜித் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 20 ரன்களிலும், ஜெகதீசன் 2 சிக்ஸர்களுடன் 18 ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய விஜய் ஷங்கர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் பொறுப்புடன் விளையாடி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி நடப்பு டிஎன்பிஎல் தொடரின் லீக் சுற்றில் தோல்வியையே தழுவாமல் தங்களுடையே 7அவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News