NZ vs ENG, 1st Test: நியூசிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்களையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது. அதன் படி நியூசிலாந்து சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் ஜேக்கப் பெட்தெலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் குழந்தை பிறப்பின் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள ஜேமி ஸ்மித்திற்கு மாற்றாக ஒல்லி போப் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், தற்போது பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்தார். இதனால் இந்திய டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வில் யங் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழந்துள்ளார்.
அதேசாமயம் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் அறிமுக வீரர் நாதன் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுதவிர மிட்செல் சாண்ட்னர், அஜாஸ் படேல் மற்றும் இஷ் சோதி என சுழற்பந்து வீச்சார்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லி. இருப்பினும் டிம் சௌதி, கிளென் பிலிப்ஸ், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திர, மேட் ஹென்றி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, டிம் சௌதீ, வில் ஓ ரூர்க்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கே), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஷோயப் பஷீர்.