ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 வீரர்கள்
நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 18அவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
அர்ஷ்தீப் சிங்
இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உள்ளார், அவர் இந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்ததுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் அர்ஷ்தீப் சிங்கின் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்ட் போல்ட்
மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் இந்தப் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது சிறந்த பந்துவீச்சாக 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோஷ் ஹேசில்வுட்
இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் ஆர்சிபி அணிக்காக அற்புதமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்த பட்டியலின் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளசர். அவர் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஒருவேளை அவர் காயம் காரணமாக போட்டிகளை தவறவிடாமல் இருந்திருந்தல் நிச்சயம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தோப்பியை வென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நூர் அஹ்மத்
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நூர் அஹ்மத். இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளார். மேலும் அவர் இந்த சீசனில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளார். அவரைதவிர்த்து யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மட்டும் இந்த சீசனில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பிரஷித் கிருஷ்ணா
Also Read: LIVE Cricket Score
ஐபிஎல் 2025 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக குஜராத் டைட்டன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா உள்ளார். அவர் இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியையும் கைப்பற்றிவுள்ளார்.