நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 18அவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றி சாதித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் குறித்து இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

Advertisement

அர்ஷ்தீப் சிங்

Advertisement

இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உள்ளார், அவர் இந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்ததுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் அர்ஷ்தீப் சிங்கின் பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்ட் போல்ட்

மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் இந்தப் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவரது சிறந்த பந்துவீச்சாக 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜோஷ் ஹேசில்வுட்

Advertisement

இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் ஆர்சிபி அணிக்காக அற்புதமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்த பட்டியலின் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளசர். அவர் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 12 போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையிலும் 22 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ஒருவேளை அவர் காயம் காரணமாக போட்டிகளை தவறவிடாமல் இருந்திருந்தல் நிச்சயம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தோப்பியை வென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

நூர் அஹ்மத்

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நூர் அஹ்மத். இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 24 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளார். மேலும் அவர் இந்த சீசனில் இரண்டு முறை 4 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளார். அவரைதவிர்த்து யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மட்டும் இந்த சீசனில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். 

Advertisement

பிரஷித் கிருஷ்ணா

Also Read: LIVE Cricket Score

ஐபிஎல் 2025 தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக குஜராத் டைட்டன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா உள்ளார். அவர் இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய நிலையில் அதில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கான பர்பிள் தொப்பியையும் கைப்பற்றிவுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News