இந்தியாவில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தானை தவிர அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடிவுள்ளன.

Advertisement

இந்நிலையில் இன்று இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 5 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும், தலா 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Advertisement

இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா வீரர் டி காக்கும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவும் முதலிடத்தில் உள்ளார்.

அதிக ரன்கள்

  • குயின்டன் டி காக், தென் ஆப்பிரிக்கா - 431
  • டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 413
  • ரச்சின் ரவீந்தரா, நியூசிலாந்து - 406
  • ரோஹித் சர்மா, இந்தியா - 398
  • ஐடன் மார்க்ரம், தென் ஆப்பிரிக்கா - 356

அதிக விக்கெட்டுகள்

  • ஆடம் ஸாம்பா, ஆஸ்திரேலியா - 16
  • ஜஸ்ரித் பும்ரா, இந்தியா - 14
  • மிட்செல் சாண்ட்னர், இந்தியா - 14
  • மேர்கோ ஜான்சென், தென் ஆப்பிரிக்கா - 13
  • ஷஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் - 13

அதிக சதம்

  • டி காக், தென் ஆப்பிரிக்கா - 3
  • டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 3
  • ரச்சின் ரவீந்தரா, நியூசிலாந்து - 2
Advertisement

அதிக சிக்ஸர்கள்

  • ரோகித் சர்மா, இந்தியா - 20
  • டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா - 19
  • ஹென்ரிச் கிளாசென், தென் ஆப்பிரிக்கா - 16

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News