ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம். இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களில் ஒருவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

5. சுனில் நரைன்

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். அதன்படி அவர் இதுவரை 177 போட்டிகளில் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், சுனில் நரைன் 536 டி20 போட்டிகளில் விளையாடி 574 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. புவனேஷ்வர் குமார்

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இடம்பெறாமல் இருப்பது சாத்தியமில்லை. இதுவரை ஐபிஎல் தொடரில் 176 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 181 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பவர்பிளே மற்றும் டெத் ஓவர்கள் இரண்டிலும் அற்புதமாக பந்து வீசும் திறன் அவரிடம் உள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் இதனை செய்வார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

3. டுவைன் பிராவோ

Advertisement

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிப்பவர் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லையன்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள பிராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. பியூஷ் சாவ்லா

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பவர் முன்னாள் இந்திய வீரரான பியூஷ் சாவ்லா தான். அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி 192 போட்டிகளில் 192 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

1. யுஸ்வேந்திர சாஹல்

இந்த பட்டியலில் இந்திய அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை படைத்த ஒரே பந்து வீச்சாளர் எனும் சாதனையையும் அவர் தன்வசம் வைத்துள்ளார். அதன்படி அவர் இதுவரை 160 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் 205 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News