ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ள டிராவிஸ் ஹெட்!

Updated: Mon, Sep 23 2024 21:42 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நாளை நடைபெறவுள்ளது.

இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் மறைந்த முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் 42 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 23ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

தற்போது இந்த இடத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 238 போட்டிகளில் விளையாடி 8 சதம், 42 அரைசதங்கள் என 6846 ரன்களுடன் உள்ளார். அதேசமயம் டிராவிஸ் ஹெட் 154 போட்டிகளில் விளையாடி 13 சதம், 37 அரைசதங்களுடன் 6846 ரன்களைச் சேர்த்துள்ளார். மேற்கொண்டு இப்பட்டியலில் டாப் 3 இடங்களில் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் வாக் உள்ளிடோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்ச் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, கூப்பர் கன்னொலி.

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை