மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் ட்ரெண்ட் போல்ட்!

Updated: Wed, Jul 20 2022 16:32 IST
Trent Boult Takes Over Bumrah In Latest ODI Rankings; Pant & Pandya Make Huge Gains (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3ஆவது ஆட்டத்தில் விளையாடாததால் ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான ஒருநாள் தரவரிசையில் பும்ரா 2ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதனால் முதலிடத்தை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் மீண்டும் கைப்பற்றியுள்ளார். 

மேலும் இப்பட்டியலில் 3ஆவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி உள்ளார். இந்தியாவின் சஹால் 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 4ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார். ரோஹித் சர்மா, 5-ம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆசாம் முதலிடத்தில் உள்ளார். 

ஆல்ரவுண்டருக்கான தரவரிசையில் ஹார்திக் பாண்டியா 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் ரவீந்திர ஜஜேடா தொடர்ந்து 14ஆவது இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை