ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டந்தாஸும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வேஸ் ஹொசைன் அரைசதம் கடந்து அசத்தினார். 

Advertisement

அவருடன் இணைந்து விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோய் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய மஹிதி ஹசன் மிராஸ் 2 ரன்களுக்கும், ஜக்கர் அலி 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு ஷமிம் ஹொசைனும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு பெவிலியனுக்கு திரும்ப ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பர்வெஸ் ஹொசைன் எமான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். 

அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பர்வேஸ் ஹொசைன் எமான் 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் என 100 ரன்களுடன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களைச் சேர்த்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஜவதுல்லா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது ஸோஹைப் 9 ரன்களுக்கும், ஆலிஷான் ஷராஃபு  ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் முகமது வசீம் மற்றும் ராகுல் சோப்ரா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது வசீம் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்த நிலையில் முகமது வசீம் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 35 ரன்களைச் சேர்த்த கையோடு ராகுல் சோப்ராவும் ஆட்டமிழந்தார். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

பின்னர் களமிறங்கிய ஆசிஃப் கான் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் யுஏஇ அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், தன்ஸிம் ஹசன், மெஹிதி ஹசன், முஸ்தஃபிசூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News