ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

Advertisement

இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

Advertisement

அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசன் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 59 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் லிட்டன் தாஸுடன் இணைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லிட்டன் தாஸ் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 27 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்தார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய தாவ்ஹித் ஹிரிடோய் ஒருபக்கம் அதிரடியாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய ஜக்கர் அலி 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தாவ்ஹித் ஹிரிடோயும், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் நடையைக் கட்டினார். இதன் காரணமாக வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 205 ரன்களைச் சேர்த்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஹம்மது ஜவதுல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News