United States of America vs South Africa Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடரின் 9ஆவது சீசன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் முன்னேறியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் குரூப் 2 பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இவ்விரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

USA vs SA: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs தென் ஆப்பிரிக்கா 
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - ஜூன் 19, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

USA vs SA Pitch Report

ஆண்டிகுவாவில் அமைந்துள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானமானது வரலாற்றில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு மித வேகத்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மேலும் இந்த மைதானத்தின் சராசரி ஸ்கோரானது 125 ரன்களாக இருந்தாலும், இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே அதிகளவு வெற்றியை ஈட்டியுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

USA vs SA T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 00
  • அமெரிக்கா - 00
  • தென் ஆப்பிரிக்கா - 00

USA vs SA: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

United States of America vs South Africa Probable Playing XI

அமெரிக்கா உத்தேச லெவன்: மொனாங்க் படேல் (கேப்டன்), ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷேடில் வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ராவால்கர், அலி கான்.

Advertisement

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரீஸா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்கியா, ஒட்னீல் பார்ட்மேன், தப்ரைஸ் ஷம்சி.

USA vs SA T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென் (துணை கேப்டன்), குயின்டன் டி காக்
  • பேட்ஸ்மேன்கள் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆரோன் ஜோன்ஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - மார்கோ ஜான்சன், ஸ்டீவன் டெய்லர், கோரி ஆண்டர்சன்
  • பந்துவீச்சாளர்கள் - சௌரப் நேத்ரவல்கர், அன்ரிச் நோர்ட்ஜே (கேப்டன்), தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா.

USA vs SA Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match USA vs SA, USA vs SA Dream11 Team, Fantasy  Cricket Tips, USA vs SA Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of America vs South Africa

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News