இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது. இந்நிலையில் 2023-2025ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிங் அங்கமாக இத்தொடர் நடைபெற்ற நிலையில், புதுபிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

அந்தவகையில் புதுபிக்கப்பட்ட இந்திய புள்ளிப்பட்டியலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பட்டியலில் இந்திய அணி 68.52 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். அதேசமயம் நியூசிலாந்து அணியானது 50 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், இலங்கை அணி 50 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், பாகிஸ்தான் அணி 36.66 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தையும் தக்கவைத்துள்ளன. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய நிலைலும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணவில்லை. அதன்படி இங்கிலாது அணியானது 36.54 புள்ளிகளுடன் தொடர்ந்து 6ஆவாது இடத்தில் தொடர்கின்றது. ஆதற்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், வங்கதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன. 

ஆனால் இத்தொடரில் படுதோல்வியைச் சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19.05 புள்ளிகளுடன் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளன. இதனால் அத்தொடருக்கு பிறகு இப்பட்டியலில் சில மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News