United States of America vs England Dream11 Prediction, T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் அமெரிக்க அணி ஏற்கனெவே அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும். இதனால் அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா அல்லது, தோல்வியடைந்து சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

USA vs ENG: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs இங்கிலாந்து
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - ஜூன் 23, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

USA vs ENG Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 46 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

USA vs ENG T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 00
  • இங்கிலாந்து - 00
  • அமெரிக்கா - 00

USA vs ENG: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

United States of America vs England Probable Playing XI

அமெரிக்கா உத்தேச லெவன்: ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கௌஸ், நிதிஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ் (கே), கோரி ஆண்டர்சன், மிலிந்த் குமார், ஹர்மீத் சிங், ஷேடில் வான் ஷால்க்விக், நோஸ்டுஷ் கென்சிஜ், அலி கான், சவுரப் நேத்ரவால்கர்.

Advertisement

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கே), ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி.

USA vs ENG T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (துணை கேப்டன்), ஆண்ட்ரீஸ் கௌஸ், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன் - ஜானி பேர்ஸ்டோவ், ஆரோன் ஜோன்ஸ்
  • ஆல்ரவுண்டர் - மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள் - சவுரப் நேத்ரவல்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் (கேப்டன்), அடில் ரஷித், ஹர்மீத் சிங், ரீஸ் டாப்லி.

USA vs ENG Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match USA vs ENG, USA vs ENG Dream11 Team, Fantasy  Cricket Tips, USA vs ENG Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between  United States of America vs England

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News