United States of America vs West Indies Dream11 Prediction, T20 World Cup 2024: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரானது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து அமெரிக்க அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

USA vs WI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அமெரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - கென்ஸிங்டன் ஓவல், பார்படாஸ்
  • நேரம் - ஜூன் 22, காலை 6 மணி (இந்திய நேரப்படி)
Advertisement

USA vs WI Pitch Report

பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இதுவரை மொத்தம் 46 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 போட்டிகளில், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோரானது 138 ரன்களாக இருந்தாலும், இந்த மைதானத்தில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 224 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு உதவலாம். 

USA vs WI T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 00
  • வெஸ்ட் இண்டீஸ் - 00
  • அமெரிக்கா - 00

USA vs WI: Where to Watch?

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

United States of America vs West Indies Probable Playing XI

அமெரிக்கா உத்தேச லெவன்: ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், நிதிஷ் குமார், ஆரோன் ஜோன்ஸ் (கே), கோரி ஆண்டர்சன், ஷயான் ஜஹாங்கீர், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரவால்கர், அலி கான்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ரோவ்மேன் பவல் (கே), ஆண்ட்ரே ரஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ரோஸ்டன் சேஸ், அகில் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி.

USA vs WI T20 World Cup Dream11 Team

விக்கெட் கீப்பர்கள் - நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ஆண்ட்ரீஸ் கௌஸ்
பேட்ஸ்மேன்கள் - பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல், ஆரோன் ஜோன்ஸ்
ஆல்ரவுண்டர் - ஆண்ட்ரே ரஸல் (துணை கேப்டன்), ஸ்டீவன் டெய்லர்
பந்துவீச்சாளர்கள் - ஹர்மீத் சிங், அல்ஸாரி ஜோசப், சவுரப் நேத்ரவால்கர்.

Advertisement

USA vs WI Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match USA vs WI, USA vs WI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs SA Pitch Report, Today   Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between United States of America vs West Indies

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News