நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியானது 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி ஹாமில்டனில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி மிகப்பெரும் பின்னடையை சந்தித்துள்ளது. 

அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கான் காயம் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகா நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கின் போது உஸ்மான் கான் காயத்தை சந்தித்தார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயம் தீவிரமடைந்துள்ளது உறுதியானது. 

இதன் காரணமாக அவர் இரண்டாவது போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய உஸ்மான் கான் 33 பந்துகளில் 39 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பாகிஸ்தான் ஒருநாள் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷஃபீக், அப்ரார் அகமது, அகிஃப் ஜாவேத், பாபர் ஆசாம், ஃபஹீம் அஷ்ரப், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம் ஜூனியர், இர்பான் நியாசி, நசீம் ஷா, சுஃபியான் முகீம், தயப் தாஹிர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News