Varun Chakravarthy Dream T20 Team: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர் தனது அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களின் பெயர்கள் சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளவர் வருண் சக்ரவர்த்தி. இவர் இதுவரை இந்திய அணிக்காக 18 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளையும், 4 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வினுடனான யூடியூப் உரையாடலின் போது வருண் சக்ரவர்த்தி தனது கனவு டி20 அணியை தேர்வு செய்துள்ளார்.

Advertisement

அதன்படி அவர் தனது அணியின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டை தேர்ந்தெடுத்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து மூன்றாம் வரிசையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவையும், 4ஆவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரனையும், 5ஆவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசனையும் தேர்வு செய்துள்ளார். 

அவர்களைத் தொடர்ந்து அணியின் ஆல் ரவுண்டர்களாக இந்திய அணியின் ஹர்திக் பாண்டியாவையும், வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்ரே ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். இதுதவிர்த்து அணியின் பந்துவீச்சாளர்களாக ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கானையும், வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் இலங்கை அணியின் மதீஷா பதிரானா ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் வருண் சக்ரவர்த்தியின் கனவு டி20 அணியில் இந்திய  அணியின் சிறந்த பேட்டர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு வாய்ப்பு தராதது ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதில் ரோஹித் சர்மா 159 போட்டிகளில் 4231 ரன்களையும், விராட் கோலி 125 போட்டிகளில் 4188 ரன்களையும் எடுத்துள்ளனர். இதனால் தான் அவர்களை வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்த டி20 அணி: ஜோஸ் பட்லர், டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, மதிஷா பதிரனா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News