T20I Bowling Rankings:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் முன்னேற்றும் கண்டுள்ளனர். 

Advertisement

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், சர்வ்தேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் ஒரு இடம் முன்னேறி 5ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் 14 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தையும், இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 48 இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மன் பாவெல் 8 இடங்கள் முன்னேறி 20ஆவது இடத்தையும், இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 38ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இதுதவிர்த்து இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தல் 34 இடங்கள் முன்னேறி 67ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், மற்றொரு இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேமி ஸ்மித 192 இடங்கள் முன்னேறி 75ஆம் இடத்திற்கு வந்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தமட்டில் நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், இங்கிலாந்தின் ஆதில் ரஷித் 2 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இந்த பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 3ஆம் இடத்திலும், ரவி பிஷ்னோய் 7ஆம் இடத்திலும், ஆர்ஷ்தீப் சிங் 10ஆம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் நீடிக்கிறார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸின் ஜேசன் ஹோல்டர் 16 இடங்கள் முன்னேறி 26ஆவது இடத்தையும், இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தெல் 240 இடங்கள் முன்னேறி 80அவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News