இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்களை குவித்தது. 

Advertisement

அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே கஎடுத்து 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன்காரணமாக முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் 11 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் குறிப்பிடவேண்டிய விசயம் யாதெனில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் டி20 கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் மட்டுமே ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

 

அதனைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் லோக்கி ஃபெர்குசன் வீசிய பந்தை கிரீசுக்குள் டீப்பாக நின்று விளையாடிய ஹர்ஷல் படேல் தனது பேட்டின் மூலம் ஸ்டம்பை இடித்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த விக்கெட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: T20 World Cup 2021

Advertisement

இந்த தொடரில் முதல் முறையாக பேட்டிங் வாய்ப்பை பெற்ற ஹர்ஷல் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி 2 போட்டிகளில் 7 ஓவர்கள் பந்து வீசிய அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News