ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
Advertisement
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 51 ரன்கள் எடுத்தார். இதில், ஜாஸ்பிரித் பும்ரா பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு 13 ரன்களைக் கடக்கும்போது, டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்தார்.
Advertisement
இந்த சாதனையை 314ஆவது டி20 ஆட்டத்தில் அவர் படைத்துள்ளார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்தியர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.