இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதையடுத்து இப்போட்டிக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

Advertisement

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணியும் நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தது. இதனையடுத்து அந்த அணி இன்று முதல் சென்னையில் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சேப்பாக்கம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில், விராட் கோலியும் இப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தான் நேற்றைய பயிற்சியின் போது விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தின் சுவரை அடித்து நொறுக்கியுள்ளது. இதையடுத்து விராட் கோலி அடித்த இந்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கோலிக்கு உள்ளது. அதன்படி விராட் கோலி மேற்கொண்டு 58 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 சர்வதேச ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை தன் வசப்படுத்துவார். தற்போது இந்த சாதனை டெண்டுல்கர் பெயரில் பதிவாகிவுள்லது. இது தவிர, சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கார ஆகியோருக்குப் பிறகு இந்த எண்ணிக்கையை எட்டும் 4ஆவது வீரர் எனும் பெருமையை அவர் பெறுவார்.

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Advertisement

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News