பார்டர் கவாஸ்கர் கோப்பை: சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!

Updated: Tue, Feb 07 2023 12:36 IST
Virat Kohli broke a long-standing Sachin Tendulkar record! (Image Source: Google)

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடப்பது கடைசி பார்டர் கவாஸ்கர் என்பதால் யார் வரலாற்று வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரையில் முக்கிய வீரர் ரிஷப் பந்த் விளையாட முடியாமல் போனதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படிப்பட்ட பிட்ச்-லும் அதிரடி காட்டுவார். இதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளதால், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் விராட் கோலி மீது திரும்பியுள்ளது. இவரின் இன்னிங்ஸின் தான் இந்தியாவை கரை சேர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடந்தாண்டு இறுதியில் அட்டகாசமான கம்பேக் கொடுத்த விராட் கோலி, இன்னும் ரன் வேட்டையை தொடர்ந்து வருகிறார். குறிப்பாக 2023ம் ஆண்டின் தொடக்கத்திலேயே 2 சதங்களை அடித்துள்ளார். டி20 மற்றும் 59 ஓவர் கிரிக்கெட்களை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சதமடிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இதனை எப்படி பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி படைக்க வாய்ப்புள்ளது. அதாவது புகழ்பெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக சதங்களை அடித்தவர் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அவர் 64 இன்னிங்ஸ்களில் 9 சதங்களை அடித்துள்ளார் ( 3262 ரன்கள் ). விராட் கோலி 36 இன்னிங்ஸ்களில் 7 சதங்களை அடித்துள்ளார். 1682 ரன்களை கோலி விளாசியுள்ளார்.

வரவுள்ள 8 இன்னிங்ஸ்களை பயன்படுத்தி விராட் கோலி இன்னும் 2 சதங்களை அடித்துவிட்டால், அதிக சதம் அடித்த பட்டியலில் சச்சினை சமன் செய்வார். ஒருவேளை 3 அடித்துவிட்டால் புதிய சாதனை உருவாகும். இரு அணிகளையும் சேர்த்துப்பார்த்தால் ஸ்டீவ் ஸ்மித் 8 சதங்களுடன் 2aஅவது இடத்திலும், ரிக்கிப்பாண்டிங் 8 சதங்களுடன் 3ஆவது இடத்திலும் இருக்கிறார்கள். ஸ்டீவ் ஸ்மித் சச்சினை முந்த இன்னும் 2 சதங்கள் தான் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை