மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்த விராட் கோலி!

Updated: Mon, Dec 30 2024 09:00 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. 

அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது. 

இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி  ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சாரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 5 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மிட்செல் ஸ்டர்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இப்போட்டியிலும் விராட் கோலி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததன் மூலம் மோசமான சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதன்படி ஒரு ஆண்டில் மிகக்குறைந்த சராசரியை கொண்ட வீரர்கள் (டாப் 7) பட்டியலில் விராட் கோலி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்த பட்டியலில் முன்னாள் வீரர் நயன் மொங்க்கியா கடந்த 1996ஆம் ஆண்டு 21.20 என்ற சராசரியில் விளையாடி முதல் இடத்தில் உள்ள நிலையில், விராட் கோலி நடப்பு 2024ஆம் ஆண்டில் 21.83 என்ற சராசரியை கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலில் தற்போது இந்திய அணியில் உள்ள கேஎல் ரகுல் 2022ஆம் ஆண்டில் 25.68 சராசரியிலும், கேப்டன் ரோஹித் சர்மா 2022ஆம் ஆண்டில் 26.22 என்ற சராசரியிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை