விராட் கோலியின் ஃபார்ம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

Updated: Tue, Feb 15 2022 16:57 IST
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 

ஒருநாள் தொடரில் இந்திய அணி அபாரமாக விளையாடிய நிலையில், டி20 தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது. ஏன் என்றால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 11 பேருமே அதிரடியாக விளையாட கூடியவர்கள்.

உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடர் இந்தியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மாவிடம் , விராட் கோலி ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கடுப்பான ரோஹித், “விராட் கோலியை நான் பார்க்கும் போது எல்லாம், அவர் நல்ல உத்தேவத்துடன் தான் உள்ளார். 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவுக்காக விராட் கோலி விளையாடியுள்ளார்.

விராட் கோலிக்கு நெருக்கடிகளையும், அழுத்தங்களை எல்லாம் எப்படி கையாள வேண்டும் என்றும் நன்றாக தெரியும், நீங்கள் எல்லாரும் அமைதி காத்தாலே அவர் சரியாகிவிடுவார்” என்று கோபமாக பதில் அளித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை