ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் அசத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 3 வெற்றிகள் பதிவு செய்துள்ளது. இத்தொடரில் பேட்டிங் துறையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர்.

Advertisement

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 2-3 என இந்தியா சரிந்து தடுமாறிய போது மீண்டும் அழுத்தமான சூழ்நிலையில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 85 ரன்கள் குவித்து ராகுலுடன் இணைந்து வெற்றி பெற வைத்தார். அதனால் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையிலே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் (49) உலக சாதனையை சமன் செய்வார் அல்லது முறியடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியிருந்தார்.

Advertisement

மேலும் ஏற்கனவே சச்சினை மிஞ்சி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்பது போன்ற நிறைய சாதனைகளை விராட் கோலி படைத்து வருகிறார். ஆனாலும் மிகவும் கடினமான விதிமுறைகளை கொண்ட 90-களில் இப்போது விட தரமான தரமான பவுலர்களை எதிர்கொண்ட சச்சின் தான் விராட் கோலியை விட சிறந்தவர் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் தம்மை பொறுத்த வரை சிறந்தவர் என்று ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய உஸ்மான் கவாஜா, “ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் என்று நான் சொல்வேன். ஏனெனில் புள்ளி விவரங்களை நீங்கள் பார்த்தால் இப்போதே அவர் கிட்டத்தட்ட சச்சினுக்கு நிகரான சதங்களை குறைந்த போட்டிகளிலேயே அடித்துள்ளார்.

இருப்பினும் நான் வளரும் போது சச்சின் தான் எங்களுடைய பெஞ்ச் மார்க்காக இருந்தார். ஆனால் விராட் கோலி தற்போது செய்வதை ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் வேறு யாரும் செய்ததில்லை. அவர் தன்னை சுற்றியுள்ள வீரர்களும் முன்னேறுவதில் முக்கிய பங்காற்றுகிறார். அதனால் அவருடன் விளையாட அனைவரும் விரும்புகின்றனர். மேலும் அவர் போட்டியின் அனைத்து சூழ்நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறமையைக் கொண்டுள்ளார்.

அதை விட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மகத்தான சேசிங் செய்பவராக இருக்கிறார். அவரை பொறுத்த வரை கன்சிஸ்டென்சி எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக நீண்ட காலமாக தொடர்ந்து அசத்தி வரும் அவர் 2 மற்றும் 4 ரன்களை அடிப்பதில் சிறந்தவராக இருக்கிறார். மேலும் அதிக சிக்ஸர்கள் அடிக்காமலேயே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News