ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் 5லும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் ஒரு காலை இந்திய அணி வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதற்கு இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோரின் அபார பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாகும்.

Advertisement

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான கடினமான போட்டியில், இலக்கை துரத்துவதற்கு தன்னுடைய வழக்கமான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு எல்லாமே ஏறுமுகத்தில் இருக்கிறது.

Advertisement

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவருடன் இணைந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் விராட் கோலி பற்றி மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார். 

விராட் கோலி குறித்து பேசிய அவர் “கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங்கில் ரன்களை குவிப்பதில் விராட் கோலி தான் தலை சிறந்தவர். விராட் கோலியின் தனித்துவமான குணங்கள் மற்றும் விளையாட்டின் மீதான அவரது பசி, திறந்து வழங்குவதற்காக தொடர்ந்து பாடுபடும் அவருடைய அர்ப்பணிப்புதான் அவரை உயர்த்துகிறது.

விராட் கோலியை விட மனவலிமையில் சிறந்த ஒரு நபரை நான் இதுவரையில் பார்த்தது கிடையாது. அவர் தன்னுடைய மேன்மைக்காக எப்பொழுதும் தொடர்ந்து உழைத்து வருகிறார். அவருடைய செயல்பாடுகள் மற்றவர்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு ஊக்கம் அளிக்கிறது” என்று கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News