நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு நடப்பு உலகக் கோப்பை தொடர் சிறப்பான ஒன்றாக அமையவில்லை. அதே சமயத்தில் சராசரியாகவும் அமையவில்லை. சராசரிக்கும் கீழாக சென்று இருக்கிறது. அவர்கள் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அரையிறுதி வாய்ப்பைத் தவற விட்டு இருக்கிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் இன்று இந்தத் தொடரில் வலிமையாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் அவர்கள் விளையாட இருப்பது புதிய எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு உண்டாக்கி இருக்கிறது. நடப்பு உலக கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணியை அறிவிக்கும் பொழுது, அவர்கள் விளையாடும் அணியில் 11 பேரும் பேட்டிங் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள், இவர்களை எப்படி வெல்வது என்று ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

Advertisement

மேலும் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல ஆட கூடியவர்கள். அப்பொழுது ஒருநாள் போட்டியை எப்படி விளையாடுவார்கள்? இந்த முறை ஒருநாள் கிரிக்கெட்டில் 500 ரன்கள் எட்டிய முதல் அணியாக மாறுவார்களா? என்று அவர்களது அதிரடி ஆட்டம் முறையின் மேல் சுவாரசியம் கூடியிருந்தது.

இந்த நிலையில்தான் அவர்களால் துவக்க பார்ட்னர்ஷிப் கூட கொண்டு வர முடியாமல், ஆஃப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்தார்கள். இந்த உலகக்கோப்பையின் எதிர்கால நினைவாக இங்கிலாந்துதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் பற்றி பேசிய விராட் கோலி கூறும், “மார்க் வுட்டுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும் திறமை இருக்கிறது. எனவே அவருடைய உண்மையான வேகத்திற்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன்.

ஆதில் ரஷீத் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட வீரர். அவர் இங்கிலாந்துக்காக மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். சவாலான பந்துவீச்சாளரான அவருக்கு எதிராக விளையாட நான் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். ஜோ ரூட் ஒட்டுமொத்தமாக சிறந்தவர். அவர் ரிவர்ஸ் ஸ்லாப் விளையாடும் விதம் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. நான் அவர் விளையாடும் அந்த ஷாட்டை விளையாட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News