ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.

Advertisement

இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 2 இடத்தை உறுதிசெய்துள்ள நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் விராட் கோலி 24 ரன்களை எடுக்கும் பட்சத்தில் அவர் ஆர்சிபி அணிக்காக 9000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைக்கவுள்ளார்.

அவர் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இதுவரை 270 இன்னிங்ஸ்களில் விளையாடி 8976 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் ஐபிஎல் தொடரில் 256 இன்னிங்ஸ்களில் 8552 ரன்களையும், சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் 14 இன்னிங்ஸ்களில் 424 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் அவர் மொத்தமாக 8 சதங்கள் மற்றும் 62 அரைசதங்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி இருவரும் கூட்டாக 62 அரைசதங்களைப் பதிவுசெய்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 46 அரைசதங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் சிறப்பாக இருந்துள்ளது. இதில் அவர் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 60.89 என்ற சராசரியுடன் 548 ரன்களை எடுத்துள்ளார். இதில் அவர் 7 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News