ஐசிசி தரவரிசை : அடுத்தடுத்த இடங்களில் கோலி, ரோஹித்!

Updated: Thu, May 27 2021 11:30 IST
Virat Kohli, Rohit Sharma Placed 2nd And 3rd In ICC ODI Rankings (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் வங்கதேச அணி வீரர் மெஹதி ஹசன் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். 

அதேபோல் இப்பட்டியலில் இந்திய அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா ஐந்தாவ்து இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணி வீரர் டிரெண்ட் போல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

மேலும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் 2ஆவது மற்றும் 3ஆவது இடத்தில் நீடிக்கின்றனர். இப்பட்டியலின் முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 18ஆவது இடத்தில் உள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மட்டும் முதல் 10 இடங்களில் இடம்பெற்று 9ஆவது இடத்தில் உள்ளார். இதில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்திலும், பென் ஸ்டோக்ஸ் 2ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை