அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisement

இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வெற்றி அணிவகுப்பையும் மேற்கொண்டது.

Advertisement

அதன்படி இந்திய வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய படி திறந்தவெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணியும் நடைபெற்றது. அதன்பின் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடிக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜொய் ஷா வழங்கினார். 

 

மேற்கொண்டு அந்த நிகழ்சியின் போது இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது இந்திய அணி வீரர் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இணைந்து ‘வந்தே மாதரம்’ பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் இக்காணொளியை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வர் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளனர். அந்த காணொளியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்களும் பாடலை பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அக்காணொளியானது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News