சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சுக்கு பெயர்போன பாகிஸ்தான் அணியில் ஒருவர் வஹாப் ரியாஸ்.  2008ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் வஹாப் ரியாஸ், 27 டெஸ்ட் மற்றும் 91 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 83 மற்றும் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Advertisement

பாகிஸ்தான் அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ், இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார்.

Advertisement

இந்நிலையில், வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வஹாப் ரியாஸ், “ரோஹித் சர்மா, பாபர் அசாம் மாதிரி சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் பந்துவீசவே நான் பயப்பட்ட ஒரு வீரர் இருக்கிறார். ஏபி டிவில்லியர்ஸ் தான் அது. 

நான் அடுத்ததாக என்ன பந்து வீசப்போகிறேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆட்டத்தை மிகச்சரியாக ரீட் செய்யக்கூடியவர் அவர். என் பவுலிங்கை எப்போதுமே சிறப்பாக ஆடிய வீரர் டிவில்லியர்ஸ்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் ரசிகர்களால் மிஸ்டர் 360 என அன்புடன் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ், சர்வதேச பந்துவீச்சாளர்கள் பலரை தெறிக்கவிட்டார். உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பவுலர்கள் கூட டிவில்லியர்ஸுக்கு பந்துவீச பயப்படுவார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News