ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிர்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் குல்பதின் நைப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் குர்பாஸ் 8 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய இப்ராஹிம் ஸத்ரான் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த குல்பதின் - அஸ்மதுல்லா ஒமர்ஸாய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பதின் நைப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 69 ரன்களில் குல்பதின் நைப் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவற ஆஃப்கானிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைக் குவித்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் கிறிஸ்டோபர் சோலே 3 விக்கெட்டுகளையும், பிராட்லி க்யூரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியில் ஜார்ஜ் முன்ஸி ஒரும்பக்கம் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் விளையாட, மற்றொரு தொடக்க வீரர் சார்லி 5 ரன்களில் ஆட்டமிழந்தர். பின்னர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் ஜார்ஜ் முன்ஸியும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிராண்டன் மெக்முலன் 7 ரன்களுக்கும், கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் கிரீவ்ஸ் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணி 70 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க் வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களைச் சேர்த்து ஆறுதளித்தார். மறுபக்கம் கிறிஸ்டோபர் சோலே 12 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஸ்காட்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் கரீம் ஜானத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News