ரோஹித் சர்மா நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு நட்டு கிரிக்கெட் வாரியங்கும் தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிசிசிஐ, சமீபத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அறிவித்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக விராட் கோலி களமிறங்க வேண்டும் என்ற குறல்கள் எழுந்து வருகின்றனர். ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 போட்டிகளில் விளையாடிஒரு சதம் 5 அரைசதங்களுடன் 741 ரன்களைச் சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார்.
இதன் காரணமாக விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீர்ர் வாசிம் ஜாஃபரும், இதே கருத்தை முன்வைத்துள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் என்று தனது சமூகவளை தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி & யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் பெறும் தொடக்கத்தைப் பொறுத்து ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் 3&4 இடங்களில் பேட் செய்ய வேண்டும். ரோஹித் சர்மா சுழற்பந்து வீச்சை நன்றாக விளையாடுகிறார், எனவே அவர் 4ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.