ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் துபாயில் ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை அறிவித்தது. அதேசமயம், டிரேடிங் முறையில் வீரர்களை சில அணிகள் பிற அணிகளிடம் இருந்தும் வாங்கினர். 

Advertisement

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் கேப்டனாக ஹார்திக் பாண்டியா வெற்றிகரமாக வழிநடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக அறிமுக சீசனிலேயே அவர் தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதனபின் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும்  வாய்ப்பை தவறவிட்டது. 

Advertisement

இதையடுத்து ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன்னதாக ஹார்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. அதுமட்டுமின்றி அணியின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை அணியின் கேப்டனாக அறிவித்தது மும்பை அணி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

 

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவரை கண்ட மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா உடனடியாக ரோஹித் சர்மாவிடம் சென்று அவரை கட்டியணைத்ததுடன், இருவரும் சிரித்து பேசியபடி சென்றனர். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News