ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது அரைசதங்களின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
இதில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஸாக் கிரௌலி- பென் டக்கெட் களமிறங்கினர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட் 46 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஒல்லி போப் 77 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலிய்னுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஹாரி புரூக் சர்வ்தேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்திப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக கேப்டன் பென் ஸ்டோக்ஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூல்ம் இரண்டாம் நாள்ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ஹாரி புரூக் 132 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ, மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனைய்டுத்து 29 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் குறித்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 53 ஓவரை நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதீ வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஒல்லி போப் அடித்த பந்தை கிளென் பிலிப்ஸ் பாய்ந்து பிடித்தார். இந்நிலையில் கிளென் பிலீப்ஸின் இந்த கேட்சை பார்த்த ரசிகர்கள் கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டராக கருதப்படும் ஜாண்டி ரோட்ஸை நினைவு படுத்துவதை போல் இருந்ததாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.