Karun Nair Duck, Ollie Pope catch: ஹெடிங்லேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

Advertisement

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 147 ரன்களையும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 134 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களையும் சேர்த்திருந்தனர். இங்கிலாந்து அணி தராப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங்க் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப் அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அதன்படி 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்காக மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு பெற்றிருந்த கருண் நாயர் ரன்களைக் குவிப்பார் என பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அப்போது இன்னிங்ஸின் 105வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசிய நிலையில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை கருண் நாயர் கவர் டிரைவ் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் அவரது பேட் முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லாததன் காரணமாக அந்த பந்தானது காற்றில் சென்றது. அப்போது ஷார்ட் கவர் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஒல்லி போப் அபாரமான டைவை அடித்து அற்புதமான கேட்சை எடுத்தார். அந்த கேட்ச் மிகவும் சிறப்பாக இருந்ததால் ஸ்டோக்ஸ் கூட ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். இதனால் கருண் நாயர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இக்காணொளியானது தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, ஷோயப் பஷீர்.

Advertisement

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News