இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அந்த அணியில் தொடக்க வீரர் டாம் பாண்டன் 30 ரன்களைச் சேர்த்த நிலையில், அவரைத்தொடர்ந்து விளையாடிய ஆடம் லித் 16, அலெக்ஸ் ஹேல்ஸ் 15, ஜோ ரூட் 16, ரோவ்மன் பாவெல் 16, லூயிஸ் கிரிகோரி 19 ரன்களைச் சேர்க்க அந்த அணி இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களைச் சேர்த்தது. சதர்ன் பிரேவ் அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரிக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சதர்ன் பிரேவ் அணிக்கு அலெக்ஸ் டேவிஸ் - ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் தலா 28 ரன்களைச் சேர்த்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே பிளெட்சர், லூயிஸ் டு பிளூய், லௌரி எவான்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

பின்னர் களமிறங்கிய கீரன் பொல்லார்ட் அதிரடியாக விளையாடி, 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 45 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொதப்பினாலும், இறுதியில் சதர்ன் பிரேவ் அணியானது 99 பந்துகளில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் டிரெண்ட் ராக்டெக்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கீரன் பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

இந்நிலையில், இப்போட்டியின் போது ராக்கெட்ஸ் அணி வீரர் ரஷித் கான் பந்துவீச்சில் பிரேவ் அணி வீரர் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதன்படி இன்னிங்ஸின் 81 - 85ஆவது பந்துகளை ரஷித் கான் வீச, அதனை எதிர்கொண்ட பொல்லார்ட் கொஞ்சம் கூட கருணைகாட்டாமல் அவர் வீசிய அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இந்நிலையில் கீரன் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News