உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக குர்பாஸ் 57 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் சேர்த்தனர்.

Advertisement

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோவை ஆஃப்கான் அணியின் ஃபரூக்கி 2 ரன்களில் வெளியேற்றினார். தொடர்ந்து வந்த இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட் முஜீப் உர் ரஹ்மான் பந்தில் வெறும் 11 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 33 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான மலான் 32 ரன்களில் வெளியேறினார்.

Advertisement

இதனால் 4ஆவது விக்கெட்டுக்கு ஹாரி ஃபுரூக் - பட்லர் கூட்டணி இணைந்தது. தொடக்கம் முதலே விக்கெட்டை காப்பாற்ற பட்லர் நிதானமாக விளையாடினார். அதேபோல் பட்லர் வந்தபின் உடனடியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஒரு பக்கம் அபாரமான லைன் மற்றும் லெந்தில் வீசி நவீன் உல் ஹக் பட்லரை கூடுதலாக அச்சுறுத்தினார். இதனால் பொறுமை இழந்த பட்லர், ரன்கள் சேர்க்க தீவிரமாக இருந்தார்.

இதனை புரிந்து கொண்டு நவீன் உல் ஹக் பந்தை சீம் பகுதியை பிடித்து க்ரீஸில் இருந்து கொஞ்சம் வெளியில் பிட்ச் செய்ய, அதனை பவுண்டரி அடிக்க முயன்று பட்லர் பேட்டை தூக்கினார். அந்த இடைவெளியில் பந்து மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. கிட்டத்தட்ட பும்ராவின் ஆக்‌ஷனில் பந்துவீசும் நவீன் உல் ஹக், அவரை போலவே ஒரு விக்கெட்டை வீழ்த்தியது ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அதுமட்டுமல்லாமல் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக்கிற்கு, விராட் கோலி ரசிகர்களும் பாராட்டை கூறி வருகின்றனர். அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களால் முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியைச் சந்தித்துள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News