SA vs IND: பயிற்சியில் களமிறங்கியது இந்திய அணி - காணொளி!

Updated: Sat, Dec 18 2021 13:22 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கிற்கு சென்றடைந்தது. 

இதையடுத்து வீரர்கள் தங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்க காலால் விளையாடப்படும் வாலிபால் பயிற்சியில் ஈடுபட்டனர். 

 

இதில் வீரர்களுடன் இணைந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி ஊழியர்களும் பங்கேற்று விளையாடினர். இதனை பிசிசிஐ காணொளியாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் வீரர்கள் மகிழ்ச்சியாக பயிற்சி மேற்கொள்ளும் இக்காணொளியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை