லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி தொடரின் 24ஆவது லீக் போட்டி ஃபுளோரிடாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நைட் ரைடர்ஸை பேட்டிங் செய்ய அழைத்த்து. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் 5ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தியதுடன் 44 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 86 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய எம்ஐ நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் 11 ரன்னிலும், மொனாங்க் படேல் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களையும், கீரன் பொல்லார்ட் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களையும் சேர்க்க, எம் ஐ நியூயார்க் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இப்போட்டியில் நியூயார்க் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ட்ரென்ட் போல்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் டிரென்ட் போல்ட் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது எம்ஐ நியூயார்க் தரப்பில் இன்னிங்ஸின் முதல் ஓவரை ட்ரென்ட் போல்ட் வீசினார். 

 

Also Read: LIVE Cricket Score

அப்போது முதல் பந்தை எதிர்கொண்ட நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் உன்முக்த் சந்த் ஆஃப் சைடுக்கு வெளியே சென்ற பந்தை டிரைவ் அடிக்க முயற்சித்த நிலையில் பந்தை தவறவிட்டார். இதனால் அந்த பந்தானது நேரடியாக ஸ்டம்புகளை பதம்பார்த்தது. இதனால் உன்முக்த் சந்த் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் உன்முக்த் சந்த் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News