மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் பிப்பா ஸ்ப்ரொல் ஒரு ரன்னிலும், மரியம் ஃபைசல் 4 ரன்னிலும், சரா பிரைஸ் 4 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய ஐல்சா லிஸ்டர் 27 ரன்களையும், மேகன் மெக்கால் 15 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேத்ரின் ஃபிரேசரும் 33 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்டினார். 

Advertisement

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேத்ரின் பிரைஸ் சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேத்ரின் பிரைஸ் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 131 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் எவ கன்னிங் 3 விக்கெட்டுகளையும், காரா முரே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து மகளிர் அணிக்கு சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களை பூர்த்தி செய்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 53 ரன்கள் எடுத்த நிலையில் சாரா ஃபோர்ப்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஏமி ஹண்டரும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து 61 ரன்களை எடுத்திருந்த கேபி லூயிஸும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிரங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் தனது பங்கிற்கு 33 ரன்கள் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லாரா டெலானி ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய லியா பால் 11 ரன்களுக்கும், லூயிஸ் லிட்டில், சோஃபி மெக்மோஹன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜேன் மாகுவெர் 28 ரன்களைச் சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லாரா டெலானி அரைசதம் கடந்தது மட்டுமின்றி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அயர்லாந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த லாரா டெலானி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News