நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசெனின் அபாரமான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்களை குவித்தது. 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி விராட் கோலி மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் முலம் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.   

Advertisement

இப்போட்டியில் பெங்களூரு அணியின் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். மேலும், இப்போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து, பெங்களூரு அணியின் விராட் கோலியின் ஆட்டம் குறித்தும் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “எங்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், நாங்கள் விராட் கோலியின் மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்கொண்டோம். நடப்பு தொடரில் பெங்களூருக்கு சிறப்பாக விளையாடி வரும் டூ பிளெசிஸை எதிர்கொண்டோம். அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் தற்போது டூ பிளெசிஸ் முதல் இடத்தில் உள்ளார். . ஒட்டுமொத்தமாக உலகத்தரம் வாய்ந்த 2 வீரர்களை நாங்கள் எதிர்கொண்டோம். ஒட்டுமொத்தமாக எங்கள் அணியினர் நல்ல முயற்சி மேற்கொண்டனர் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News