வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ளது.

Advertisement

இந்தநிலையில், விண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விசயங்களைப் பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பரான இஷான் கிஷனிற்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து பேசிய ரோஹித் சர்மா, “இஷான் கிஷன் திறமையான கிரிக்கெட் வீரர். லிமிடெட் ஓவர் போட்டிகளில் அவர் விளையாடும் விதம் எப்படி இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் தான் அவர் இரட்டை சதம் அடித்தார். அவரது திறமையின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் தேவை இல்லை. இஷான் கிஷனிற்கான போதிய வாய்ப்புகள் வழங்க விரும்புகிறேன். 

இஷான் கிஷன் இடது கை ஆட்டக்காரர் என்பதும் அவர் அதிரடி ஆட்டத்தை விரும்புபவர் என்பதும் அவரது தனிச்சிறப்பு. பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் இஷான் கிஷன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து அதிகமான வாய்ப்புகளும் வழங்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News