ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்துடன் 53 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களையும், இறுதியில் கார்பின் போஷ் அதிரடியாக விளையாடி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 43 ரன்களையும், ஜோஸ் பட்லர் 30 ரன்களையும், ஷெஃபேன் ரூதர்ஃபோர்ட் 28 ரன்களையும் சேர்த்தனர். இறுதியில் ராகுல் திவேத்தியா 11 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தானர். இதன்மூலம் குஜராத் டைட்டான்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “நாங்கள் நன்றாகப் போராடினோம் என்று நினைக்கிறேன், ஒரு குழுவாக நாங்கள் தொடர்ந்து முன்னேறினோம். ஆனால் இது 150 ரன்களை மட்டும் எடுக்கக்கூடிய விக்கெட் இல்லை என்று நினைக்கிறேன், ஆதனால் நாங்கள் 25 ரன்கள் குறைவாக எடுத்தோம். இருப்பினும் எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் இன்னிங்ஸ் முழுவதும் தொடர்ந்து போராடியதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

Also Read: LIVE Cricket Score

இந்த போட்டியில் நாங்கள் கேட்சுகளை தவறவிட்டாலும், அது எங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. வீரர்கள் களத்தில் 120 சதவீதத்தையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் இன்னிங்ஸில் மைதானம் ஈரமாக இல்லை, ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது மழை தொடர்ந்து வந்ததால் எங்களுக்கு பந்துவீச கடினமாக இருந்தது. இருப்பினும் நாங்கள் ஆட்டத்தை விளையாட வேண்டியிருந்தது, அதைச் செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News