இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

Updated: Sat, Oct 05 2024 09:45 IST
Image Source: Google

இலங்கை அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 13ஆம் தேதி முதல் டி20 தொடரும், அக்டோபர் 20ஆம் தேதி முதல் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது.

மேலும் இதில் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் தம்புளாவிலும், ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் கண்டியிலும் நடைபெறவுள்ளது. முன்னதாக இலங்கை அணி சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றிய உத்வேகத்துடன் இத்தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென் ஆப்பிரிக்க தொடரை வென்ற கையோடு இத்தொடரை எதிர்கொள்வதால் ரசிகர்களின் எதிபார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி டி20 அணியின் கேப்டனாக ரோவ்மன் பாவெலும், ஒருநாள் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த அணியில் நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், அகீல் ஹொசைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இடம்பெறவில்லை. 

அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள இளம் அதிரடி வீரர் பிராண்டன் கிங், ஆல் ரவுண்டர் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பியுள்ளனர். இதுதவிர ஷமார்  ஜோசப், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஆண்ட்ரே ஃபிளெட்சர், எவின் லூயிஸ், ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், அலிக் அதானாஸ், ஆண்ட்ரே பிளெட்சர், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அல்ஸாரி ஜோசப், ஷாய் ஹோப், ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜுவல் ஆண்ட்ரூ, அலிக் அதானாஸ், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர் அட்டவணை

டி20 தொடர்

  • முதல் டி20, தம்புல்லா, அக்டோபர் 13
  • 2ஆவது டி20, தம்புல்லா, அக்டோபர் 15
  • 3ஆவது டி20, தம்புல்லா, அக்டோபர் 17

Also Read: Funding To Save Test Cricket

ஒருநாள் தொடர்

  • முதல் ஒருநாள் போட்டி, கண்டி, அக்டோபர் 20
  • 2ஆவது ஒருநாள் போட்டி, கண்டி, அக்டோபர் 23
  • 3ஆவது ஒருநாள் போட்டி, கண்டி, அக்டோபர் 26
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை