இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!

Updated: Tue, Jul 02 2024 11:29 IST
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது தங்களுடைய கடைசி டெஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆபார வெற்றியைப் பெற்ற கையோடு இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இந்திய அணிக்கு எதிரான படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சொந்த மண்ணில் இந்த டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளதால் அந்த அணி மீது கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. 

மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 33.33 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்த தோல்விகளின் காரணமாக 17.50 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடர்வதால், நிச்சயம் இத்தொடரில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இரு அணியிலும் சில நட்சத்திர வீரர்கள் விளையாடவுள்ளனர். இதனால் இத்தொடரில் எந்த அணி வெற்றியைப் பதிவுசெய்து தொடரை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இரு அணி வீரர்கள் மற்றும் போட்டி அட்டவணை ஆகியவை குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லன் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி: கிரேய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜோசுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், கவேம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், மிகைல் லூயிஸ், சக்கரி மெக்கஸ்கி, கிர்க் மெக்கென்சி, குடகேஷ் மோட்டி, கீமார் ரோச், ஜேய்டன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் அட்டவணை

  • முதல் டெஸ்ட் போட்டி - ஜூலை 10 to ஜூலை 14 - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி - ஜூலை 18 to ஜூலை 22 - டிரெண்ட் பிரிட்ஜ் மைதனம், நாட்டிங்ஹாம்
  • மூன்றாவது டெஸ்ட் போட்டி - ஜூலை 26 to ஜூலை 30 - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை