WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கிரெனடாவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பியூ வெப்ஸ்டர் 60 ரன்களையும், அலெக்ஸ் கேரி 63 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களையும், ஜான் காம்பெல் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்களையும், ஷமார் ஜோசப் 29 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 253 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வு மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்காளையும், கேமரூன் க்ரீன் 52 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 39 ரன்களையும், அலெக்ஸ் கேரி 30 ரன்களையும் சேர்க்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களைச் சேர்த்து நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 277 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கிரேய்க் பிராத்வைட், ஜான் காம்பெல், கேசி கார்டி, பிராண்டன் கிங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த கேப்டன் ரோஸ்டன் சேஸ் - ஷாய் ஹோப் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் ஷாய் ஹோப் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 34 ரன்களைச் சேர்த்திருந்த கேப்டன் ரோஸ்டன் சேஸும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

Also Read: LIVE Cricket Score

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News