விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!

Updated: Sun, Jun 15 2025 16:17 IST
Image Source: Google

WI vs AUS Test Series: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக சாம் கோன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார். 

நடந்து முடிந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவியதுடன், நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் சோபிக்க தவறியதே அந்த அணியின் இந்த தோல்விக்கான மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

ஏனெனில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோர் சோபிக்க தவறினர். குறிப்பாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வாய்ப்பை பெற்றிருந்த லபுஷாக்னே இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 39 ரன்களையும், மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 6 ரன்களை, கேமரூன் க்ரீன் 4 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தனர். 

இதனால் அணியின் பேட்டிங் வரிசை பெரும் சிக்கலை சந்தித்துள்ளன. மேலும் இளம் அதிரடி தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு ஏன் இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்விகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுதியுள்ளார். 

இதுகுறித்து பேசிய டெய்லர், “டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகுகிறது. ஆனால் அவருக்கான மாற்று வீரரை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உண்மையாகச் சொல்லப் போனால், தேர்வாளர்களும் இதற்காக அவ்வளவு முயற்சிக்கவில்லை என்று தான் கூற வேண்டு. ஏனெனில் இலங்கை டெஸ்ட் தொடரின் போது டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக பயன்படுத்தினார்கள்.

ஆனால் அதற்கு முன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 60 ரன்களை எடுத்த சாம் கொன்ஸ்டாஸை இலங்கை தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது உள்ள சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு முன்பு சாம் கோன்ஸ்டாஸை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும், அவர் இன்னும் சாதாரணமான முறையில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்.

அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஸ்டீவ் ஸ்மித் அந்தத் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் தேர்வாளர்களுக்கு இந்த முடிவை எடுப்பது கொஞ்சம் எளிதாகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை, உஸ்மான் கவாஜா தொடக்க வீரராக சிறப்பாக செயல்படாதது. அவர் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவதில்லை, அதனால் அவர் தனை சரிசெய்ய வேண்டும் என சொல்ல விரும்புகிறேன்.

Also Read: LIVE Cricket Score

கடந்த இரண்டு வருடங்களாக அவரது சராசரி 34ஆக உள்ளது. ஆனால் இலங்கையில் உள்ள மெதுவான பிட்சில் அவர் அடித்த 200 ரன்களை நீங்கள் எடுத்து விட்டால் அவரது சராசரி 25ஆக தான் இருக்கும். அதேபோல் மார்னஸும் டாப் ஆர்டரில் ரன்களை சேர்ப்பதில்லை. மேலும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நாம் பிரச்சனைகளை சரிசெய்ய் வேண்டும் எனில் சாம் கொன்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை