West Indies vs England 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்து அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நாளை (அக்டோபர் 31) ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் படுதோல்வியைச் சந்தித்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுமே தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்த தொடரில் விளையாட இருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

 

WI vs ENG 1st ODI:போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து
  • இடம் - சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், ஆண்டிகுவா
  • நேரம் - அக்டோபர் 31, இரவு 11.30 மணி (இந்திய நேரப்படி)

WI vs ENG 1st ODI Pitch Report

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 37 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில் அதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 19 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 229 ரன்களாக உள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 199 ரன்களாக உள்ளது. இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 326 ரன்களாக இருக்கிறது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

Advertisement

WI vs ENG 1st ODI: Where to Watch?

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் இத்தொடரை பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம். 

WI vs ENG ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 105
  • வெஸ்ட் இண்டீஸ் - 53
  • இங்கிலாந்து - 46
  • முடிவில்லை - 06
Advertisement

West Indies vs England 1st ODI Probable Playing XI

வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: பிராண்டன் கிங், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், கேசி கார்டி, ஷிம்ரோன் ஹெட்மையர், ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, குடகேஷ் மோட்டி, அல்ஸாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட் , டான் மௌஸ்லி, வில் ஜாக்ஸ், ஜேக்கப் பெத்தெல், லியாம் லிவிங்ஸ்டோன் (கேப்டன்), சாம் கரன், சாகிப் மஹ்மூத், ரெஹான் அகமது, ஆடில் ரஷித், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரீஸ் டாப்லி.

Advertisement

WI vs ENG 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஷாய் ஹோப் (துணை கேப்டன்), பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - பிராண்டன் கிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜேக்கப் பெத்தேல்
  • ஆல்-ரவுண்டர்கள் - சாம் கர்ரன் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், வில் ஜாக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - அல்ஜாரி ஜோசப், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

WI vs ENG 1st ODI Dream11 Prediction, WI vs ENG Dream11 Prediction, Today Match WI vs ENG, WI vs ENG ODI Series, WI vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs England

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News