WI-W vs SA-W, 2nd T20I: தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி கேப்டன் ஹீலி மேத்யூஸ் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வீராங்கனைகள் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக அன்னேரி டெர்க்சன் 21 ரன்களையும், நதின் டி கிளார்க் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆஃபி ஃபிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ் இண்டீஸ் மகளிர் அணிக்கு கியானா ஜோசப் மற்றும் கேப்டன் ஹீலி மேத்யூஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் கியானா ஜோசப் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து  களமிறங்கிய ஷாவ்னிஷா ஹெக்டர் 3 ரன்களிலும், ஷெமைன் காம்பெல் 7 ரன்னிலும், சினெல்லே ஹென்றி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் ஹீலி மேத்யூஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News