ஷுப்மன் கில்லிடம் காதலை வெளிப்படுத்திய ரசிகை; வைரல் புகைப்படம்!

Updated: Sat, Jun 10 2023 15:41 IST
women shouted i love you and send marriage proposal to shubman gill! (Image Source: Google)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதில், டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே அதிகபட்சமாக 89 ரன்கள் எடுத்தார். சிறந்த ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் 51 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில், தொடக்க வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக 3ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. 

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியின் போது ரசிகை ஒருவர் ஷுப்மன் கில்லை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். என்னை திருமணம் செய்து கொள் என்பது போன்ற பாதாகை ஒன்றை காண்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை